சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 5:58PM by PIB Chennai
தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், சுகாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை, சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகளை மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று ஆய்வு செய்தார்.
புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்குச் (எய்ம்ஸ்) சென்று பார்வையிட்ட அவர், காசியாபாத்தைச் சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் கீழ் உருவாக்கி, நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் தங்குவதற்கான இடமாகப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள, எய்ம்ஸ் அதிர்ச்சி சிகிச்சை மைய விரிவாக்க வளாகத்தில் உள்ள புதிதாகக் கட்டப்பட்ட நோயாளி காத்திருப்பு அறையையும் ஆய்வு செய்தார். மேலும், அந்நிறுவனத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
தூய்மை, சுகாதாரம், கழிவு மேலாண்மை மற்றும் நிறுவன வளாகங்களைப் பராமரித்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, தூய்மை இயக்கத்தின் கீழ் எய்ம்ஸ் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சருக்கு விரிவாக விளக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330136®=3&lang=1
(Release ID: 2330136)
****
SK/SV/SH