சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகவமைப்பு உத்திகள் மூலம் கடலோர மீள்திறனை மேம்படுத்துதல் குறித்த தேசியப் பயிலரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 5:56PM by PIB Chennai

தகவமைப்பு உத்திகள் மூலம் கடலோர மீள்திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில், தேசியப் பயிலரங்கை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பயிலரங்கு 2026 அக்டோபர் 29 முதல் 30 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது. இது பசுமை பருவநிலை நிதியத்தின் கீழ், இந்தியாவின் கடலோர சமூகங்களின் பருவநிலை மீள்திறனை மேம்படுத்துதல் என்ற திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது. சதுப்புநிலக் காடுகள், கடலோர நீர்நிலைகள், கடற்புற்கள், உவர் சதுப்பு நிலங்கள்,,பவளப்பாறைகள் உள்ளிட்ட முக்கிய கடலோரச் சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதிலும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதிலும் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

இந்த பயிலரங்கில் தொடக்க உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல் துறை  அமைச்சகத்தின் செயலாளர் திரு நரேந்திர பூஷன், பிரதமர் திரு நரேந்திர மோடியால் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு எதிராகக் கடலோரப் பகுதிகளை மீள்திறன் மிக்க பகுதிகளாக  உருவாக்குவது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330131&reg=3&lang=1

(Release ID: 2330131)

****

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330217) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी