திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட்டின் ரெய்வாலாவில் உள்ள அரசு போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தின் திட்டங்கள் குறித்து மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை கூடுதல் செயலாளர் மோனா கே கந்தர் கேட்டறிந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 5:03PM by PIB Chennai

உத்தராகண்ட்டின் ரெய்வாலாவில் உள்ள அரசு போதைப் பொருள் மறுவாழ்வு மையம் அங்கு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை, தொழில்முறை கலந்தாய்வு, திட்டமிடப்பட்ட அன்றாட செயல்முறைகள், ஆரோக்கியத்தை மேம்படுத்துக்கூடிய செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கண்ணியமிக்க முழுமையான மறுவாழ்வு அணுகுமுறையை முன்னெடுக்கிறது.

இளையோர் மற்றும் மக்கள் மேம்பாட்டிற்கான அமைப்பால் நடத்தப்படும் இம்மையத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கூடுதல் செயலாளர் திருமதி மோனா கே கந்தர் பார்வையிட்டார். அங்கு இருப்பவர்களுடன் உரையாடிய அவர், அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிந்து அம்மையத்தில் செயல்படுத்தப்படும் மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டார்.

போதைப் பொருள் மறுவாழ்வுத் திட்டங்களில் யோகா, இயற்கை மருத்துவம் போன்ற பாரம்பரிய நடைமுறைகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆராய்வதற்கு ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட விரும்புவதாக திருமதி கந்தர் குறிப்பிட்டார்.

 

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330087®=48&lang=1&_gl=1*1

****

SK/IR/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330212) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी