இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 4:50PM by PIB Chennai
இந்திய கடற்படையின் முக்கியத்துவம் வாய்ந்த கப்பலான ஐ.என்.எஸ் திரிசூல், இத்தாலியில் உள்ள சிவிட்டவெச்சியா கடற்பகுதியை சென்றடைந்தது. மத்திய தரைக்கடல் பகுதியில் தனது செயல்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் சென்றுள்ள ஐ.என்.எஸ் திரிசூல் கப்பலுக்கு, இத்தாலி கடற்படை வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஐ.என்.எஸ் திரிசூலின் செயல்பாடுகள் குறித்து, இத்தாலி கடற்படை குழுவினருக்கு திரிசூல் கப்பலின் கட்டளை கமாண்டர் எடுத்துரைத்தார். முக்கிய அம்சமாக திரிசூல் கப்பலை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, இத்தாலி வாழ் இந்தியர்கள், திரிசூல் கப்பலை கண்டுரசித்தனர். இத்தாலிக்கான இந்திய தூதர் திருமதி வாணி ராவ், திரிசூல் கப்பலுக்கு வருகைதந்த நிலையில், இந்திய கடற்பை குழுவினருடன் அவர் கலந்துரையாடினார்.
இந்நிலையில், இந்திய கடற்படை குழுவினர், சிவிட்டவெச்சியாவில் உள்ள இத்தாலிய விமானம் தாங்கிய கப்பலான ஐ.டி.எஎஸ்-ஐ பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, திரிசூல் கப்பலில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்தாலி கடற்படையை சேர்ந்த மூத்த அதிகாரிகள், 13 நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலைநிகழ்ச்சியை கண்டுரசித்தனர்.
இந்தியா, இத்தாலி கடற்படையை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இருநாடுகள் இடையேயான கடற்படை பயிற்சி, கருத்துக்களை பரிமாறிக்கொள்வது, கலாச்சார பரிமாற்றம் ஆகியவை இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330070®=48&lang=1&_gl=1
****
SK/LN/SH