தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 5:50PM by PIB Chennai
தேசிய இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தொலைத்தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு மீட்புக் குழு, இணையதள மோசடிகள், இணையதளத் தாக்குதல்கள், இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
இந்த இணையவழிக் கருத்தரங்கை, தொலைத்தொடர்புத் துறை தலைமை இயக்குநர் திரு அனில் குமார் குப்தா, தொலைத்தொடர்புத் துறை தலைமையகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு சுரேஷ் பூரி ஆகியோர் இணைந்து, தொலைத்தொடர்புத் துறை துணை தலைமை இயக்குநர் திரு யஷ்வந்த் குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.
சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு தனிநபரின் விழிப்புணர்வும் இன்றியமையாதது என்றும், தனிப்பட்ட, நிறுவன, சமூக, தேசிய அளவில் சைபர் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முதல் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.
தொலைத்தொடர்புத் துறை தலைமையகம், உரிமம் பெற்ற சேவைப் பகுதிகலிருந்து 190-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், இணையதள சேவை வழங்குநர்கள் போன்ற தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330125®=3&lang=1
(Release ID: 2330125)
****
SK/SV/SH