இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 4:13PM by PIB Chennai
சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ன் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஒ) தமது தலைமையகங்கள், ஆய்வகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறைதீர்ப்பு துறை ஒருங்கிணைப்புடன் நிலுவைப் பணிகளைக் குறைத்தல், பொதுமக்களின் குறைதீர்ப்புப் பணியை விரைவுப்படுத்துதல், ஆவணங்களை மின்னணுமயமாக்கல், பணியிடங்களில் தூய்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இயக்கம் கவனம் செலுத்தியது.
நிலுவையில் உள்ள பொது மக்களின் குறைகள், நாடாளுமன்ற உறுதிமொழிகள், அமைச்சகங்களுக்கிடையேயான பரிந்துரைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதில் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டது. சுமார் 20,000 கோப்புகள் அகற்றப்பட்டு அதனுடைய தாள்கள் மறுசுழற்சிக்காக காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. சுமார் 5 லட்சம் வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கங்களும், ஆவணங்களும் நிர்வாக வெளிப்படைத் தன்மைக்காக மின்னணுமயமாக்கப்பட்டன. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330042®=3&lang=1&_gl=1
***
SS/IR/GS/SH