புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துணைத் துறை சார்ந்த சேவைகள் உற்பத்திக் குறியீட்டின் சோதனை முடிவுகள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், 2024-25-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு, 19 துணைத் துறைகளுக்கான ஆகஸ்ட் மாத சேவைகள் உற்பத்திக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.

இந்த மாதாந்திர சேவைகள் உற்பத்தி குறியீடுகள் சோதனை அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், தரவுகளின் தரத்தை ஆய்வு செய்யவும், அதன் நம்பகத்தன்மையைச் சோதிக்கவும், மேலும் சம்பந்தப்பட்டவர்கள், பயனர்களிடமிருந்து கருத்துகளைப் பெறவும் அமைச்சகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்.

இதன்படி, மொத்த விற்பனை வர்த்தகத்தில் சேவை உற்பத்திக்கு குறியீடு  ஆகஸ்ட் மாதத்தில் 122.9 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 10.2 சதவீதம் கூடுதலாகும். சில்லறை விற்பனை வர்த்தகக் குறியீடு 139.2 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 19.9 சதவீதம் அதிகமாகும்.

ரயில்வே, வங்கி, காப்பீடு ஆகிய துணைத் துறைகளுக்கான குறியீடுகள், தற்காலிக மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஆண்டுதோறும் திருத்தியமைக்கப்படும்.

இந்த குறியீடு குறித்த தகவல்கள், மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் (http://www.mospi.gov.in ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேவைகள் உற்பத்தி குறியீடு தொடர்பான தரவுகளை https://esankhyiki.mospi.gov.in  என்ற இணையதளத்திலும் காணலாம்.

    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330036&reg=3&lang=1&_gl=1

 

***

SS/SV/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2330192) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी