இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 3:36PM by PIB Chennai
சிறப்பு தூய்மை இயக்கத்தின் கீழ் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவல் மையத்தின் கீழ் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய தகவல் மைய சேவைகள் நிறுவனம் தில்லியில் அதன் நிறுவனங்களில் தூய்மைப் பணி, நிலுவைப் பணிகளைக் குறைத்தல் ஆகிவற்றில் ஈடுபட்டது.
பணியிடங்களில் தூய்மையை ஊக்குவித்தல், காலாவதியான உபகரணங்களை அகற்றுதல், ஆவண மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது. தேசிய தகவல் மைய சேவைகள் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் தூய்மை உறுதிமொழி ஏற்புடன் இது தொடங்கியது. அதை தொடர்ந்து அதன் இடங்களில் தூய்மை தொடர்பான பணிகள் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330016®=3&lang=1&_gl=1
***
SS/IR/GS/SH