வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய பருவநிலை இலக்குகளுக்கான உள்ளூர் நடவடிக்கை: அரைஸ் நகர்ப்புற மன்றம் 2026-ல் தில்லி பிரகடனம் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 3:14PM by PIB Chennai

உலகளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பது  குறித்த இலக்குகளை எட்டும் வகையில், உள்ளூர் நடவடிக்கை சார்ந்த தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், அரைஸ் நகர்ப்புற மன்றத்தின் கூட்டம் 2026 அக்டோபர் 28 அன்று நிறைவடைந்தது.

புதுதில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் நடைபெற்ற இந்த மன்றத்தின் இரண்டாவது கூட்டத்தை, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆதரவுடன், தெற்காசிய உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்முயற்சிக்கான சர்வதேசக் குழுமம், தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கூட்டத்தில், 18 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான நகரங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மன்றத்தின் கூட்டத்தில், மூன்று தொழில்நுட்பக் கூட்டங்களும், 14 தொழில்நுட்ப அமர்வுகளும் இடம்பெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330002&reg=3&lang=1&_gl=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330138) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी