தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பதிண்டாவில் உள்ள அல்ட்ராடெக் நிறுவனத்தின் 217 தொழிலாளர்களுக்கு ரூ.3.36 கோடி மதிப்பிலான தீர்வு ஒப்பந்தங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 1:28PM by PIB Chennai

தொழிலாளர் நலன், இணக்கமான தொழில் உறவுகளை மேம்படுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள அல்ட்ராடெக் நிறுவன நிர்வாகத்திற்கும், தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே இரண்டு தீர்வு ஒப்பந்தங்கள் அக்டோபர் 14, 2026 அன்று கையெழுத்தாகியுள்ளன.

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்பேரில், ஜலந்தர் உதவி தொழிலாளர் ஆணையர்  மேற்கொண்ட ஆக்கபூர்வ சமரச முயற்சிகளின் காரணமாக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தங்களின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 217 தொழிலாளர்களுக்கு ரூ.3.36 கோடி மதிப்பிலான நிதிப் பலன்கள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329951&reg=48&lang=1    

***

SS/SV/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2330054) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi