ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பாக நடைபெற்ற தூய்மைப் பணி

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 11:33AM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை சார்பில், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை பணி நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில், ஜவுளித்துறை அலுவலகங்களில் உள்ள சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்துதல், ஆவணங்களை பராமரித்தல், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் சிறப்பாக நடைபெற்றன. ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளை சுத்தப்படுத்தியதுடன், ஆவணங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அலுவலகங்களில் நீண்டகாலம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டது. பிளாஸ்டிக், மின்னணு கழிவுகள் ஆகியவையும் அகற்றப்பட்டன. பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் 4.38 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலங்களையும் தொடர்ந்து இதேபோன்று சுத்தம், சுகாதாரத்துடன் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329888&reg=3&lang=1

***

SS/LN/ PS


(வெளியீட்டு அடையாள எண்: 2330052) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Gujarati