பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறன்களை எடுத்துரைக்கும் நிகழ்வு புதுதில்லியில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 1:24PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கூட்டுப் போர் முறை பயிற்சி மையத்துடன் இணைந்து புதுதில்லி மானக்‌ஷா மையத்தில் 2026 அக்டோபர் 30 அன்று நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பாதுகாப்புத் தளவாட திறன்களைக் காட்சிப்படுத்துதல், உலகளாவிய நட்புறவுகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவதையும் நட்பு நாடுகளுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ச்சியை சர்வதேச நட்புறவு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பு, உத்திசார் நட்புறவுகளுக்கான வழிவகைகளைக் கண்டறியவும் இந்நிகழ்வு பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை, தொழில் துறை, கல்வித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளை ஒருங்கிணைக்கும்.

தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவதிலும் சர்வதேச நட்புறவுகளை விரிவுப்படுத்துவதிலும் இந்தியாவின் பயணத்தை இந்த உரையாடல்கள் முதன்மைப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329949&reg=3&lang=1

***

SS/IR/ GS/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2330030) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati