இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 6:03PM by PIB Chennai
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், தற்போது நடைபெற்று வரும் தூய்மை பாராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், செயல்பாட்டுத் திறன், தூய்மை, ஆவண மேலாண்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிறுவனச் சிறப்பம்சங்கள், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றில் கொண்டுள்ள உறுதியான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு முக்கியச் செயல்பாட்டுக் குறியீடுகளில் அமைச்சகம் சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
நாடு தழுவிய தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக, திட்டமிடப்பட்டிருந்த 75 தூய்மை இயக்கங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இந்த ஆண்டு, கூடுதல் முன்னெடுப்புகளை மேற்கொண்டதன் மூலம், அமைச்சகம் தனது தொடக்க கால இலக்குகளைக் கடந்து செயல்பட்டுள்ளது. இதன் விளைவாக, 15,740 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், இன்னும் கூடுதல் இடவசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மின்னணுக் கழிவு மேலாண்மை, மறுசுழற்சி முயற்சிகள் மூலம், மின்னணு, மின் சாதனங்களைச் சரியாகக் கையாண்டதன் வாயிலாக, இந்த இயக்கம் ரூ 10,50,520 வருவாயை ஈட்டியுள்ளது.
ஆவண மேலாண்மை, மக்கள் குறைகளுக்குத் தீர்வு காண்பதில், அமைச்சகம் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 2,523 கோப்புகளில், 850 கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9,309 கோப்புகளில், 8,823 கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329660®=3&lang=1
****
SK/SV/RJ