பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - கொரியா கடற்படை கூட்டுப் பயிற்சிக்காக ஐஎன்எஸ் சயாத்ரி பூசன் துறைமுகம் சென்றடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 4:58PM by PIB Chennai

இந்தியா – கொரிய குடியரசு கடற்படை இடையேயான இருதரப்பு பயிற்சியில் பங்கேற்பதற்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் ஏவுகணைக் கப்பலான ஐஎன்எஸ் சயாத்ரி 2026 அக்டோபர் 26 அன்று கொரிய குடியரசின் பூசன் கடற்படைத் துறைமுகத்தை சென்றடைந்தது.

இருநாட்டு கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மற்றொரு நடவடிக்கையாகவும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டு கடற்படைக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் இப்பயணம் அமைந்துள்ளது.  பூசன் துறைமுகத்தில் ஐஎன்எஸ் சயாத்ரிக்கு கொரிய குடியரசுக் கடற்படையால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியின்போது இருநாட்டு கடற்படை பணியாளர்களின் உரையாடல், இருநாட்டு கப்பல்களை பார்வையிடுதல், கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றில் கடற்படையின் பங்கேற்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329562&reg=3&lang=1

***

SK/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329741) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी