சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 4:38PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, 'முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு, அரசு நிர்வாகத்தில் ஊழலைத் தடுப்பதில் கண்காணிப்பு நடவடிக்கைகளின் பங்கு' குறித்த சிறப்புக் கருத்தரங்கு புதுதில்லியில் உள்ள அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (2026 அக்டோபர் 28) நடைபெற்றது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் இயக்குநர் திருமதி தமன்னா சின்ஹா இதில் சிறப்புரையாற்றினார். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, நேர்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் செயல்முறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதிலும், நிறுவன அமைப்பை வலுப்படுத்துவதிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தரங்கில், நிர்வாக நடைமுறைகளில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிதல், சிறந்த நடைமுறைகளைக் கையாளுதல் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிர்வாகம், நிதி, கொள்முதல், சட்டம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள ஏராளமான அதிகாரிகள், பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பொதுச் சேவையில் நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329539®=3&lang=1
****
SK/PD/RJ