இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 4:05PM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோல் இந்தியா நிறுவனத்தின் துணை அமைப்பான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (எம்சிஎல்), தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் மின்னணுக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதன் தலைமை அலுவலகத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சியை நடத்தியது. மின்னணுக் கழிவுகளை முறையாக அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். தூய்மையான பணிச்சூழல், நிலையான எதிர்காலத்திற்குப் பங்களிக்குமாறு ஊழியர்களை மனிதவளத் துறை இயக்குநர் திருமதி ரேகா பாண்டே கேட்டுக்கொண்டார். மின்னணுக் கழிவுகளைச் சேகரித்தல், தரம் பிரித்தல், அறிவியல் பூர்வமாக மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இந்த தெருக்கூத்தின் மூலம் விளக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329501®=3&lang=1
***
SS/PD/RJ