இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 3:57PM by PIB Chennai
பிரதமரின் வளர்ச்சியடைந்த கிராம தன்னாட்சித் திட்டத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணையும் வகையில், நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நவீன முன்முயற்சியாக இத்திட்டம் அமையும்.
இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு (பதினாறாவது நிதிக் குழுவின் காலத்திற்கு இணையாக) செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.7,395.55 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.4,869.48 கோடியும், மாநிலங்களின் பங்களிப்பாக ரூ.2,526.07 கோடியும் அடங்கும்.
நாடு முழுவதும் உள்ள 2.55 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்து அமைப்புகள், பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த, 32 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பஞ்சாயத்துப் பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் இத்திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக இருப்பர்.
இத்திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் ஒவ்வொரு நிகழ்வும் குறைந்தது 1 கோடி குடிமக்களைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழு, நடைமுறைகள், விதிகளுக்கு உட்பட்டு இந்தத் திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும். மத்திய அரசு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பு எல்லைகளுக்குள் பணிகளை மேற்கொள்ளும். இதற்காக ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப உதவி, கண்காணிப்பு, மறுஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடிப்படை அளவில் இத்திட்டத்தைச் செயல்படுத்த, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிறுவனக் கட்டமைப்பு, திறன் மேம்பாட்டு வசதிகள், டிஜிட்டல், தகவல் தொடர்பு அமைப்புகள் பயன்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329491®=3&lang=1
***
SS/SV/GS