நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0: எஸ்இசிஎல் நிறுவனம் 4,602 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ.26.17 கோடி வருவாய் ஈட்டியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 12:01PM by PIB Chennai

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனத்தின் துணை அமைப்பான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (எஸ்இசிஎல்), தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் பல்வேறு தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அதன் அலுவலக வளாகங்களில் தூய்மைப் பணிகள், பழைய பொருட்களை அகற்றுதல், ஆவண மேலாண்மை ஆகியவற்றில் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

226 இடங்களில் 47 லட்சம் சதுர அடிக்கும் அதிக பரப்பளவிலான வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. 4,602 மெட்ரிக் டன் பழைய, தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் சுமார் ரூ.26.17 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மேலும், பிலாஸ்பூரில் உள்ள தலைமை அலுவலகம், குடியிருப்புகளில் மின்னணுக் கழிவுகளைச் சேகரிக்கும் விழிப்புணர்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பணிச்சூழலைத் தூய்மையாகவும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் இந்நிறுவனம் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329341&reg=3&lang=1

***

SS/PD/GS   


(வெளியீட்டு அடையாள எண்: 2329500) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu