இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 8:13PM by PIB Chennai
எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) அருணாங்க் திட்டம், அக்டோபர் 24, 2026 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் நஹர்லகுனில் தனது 19-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. அருணாச்சலப் பிரதேசத்தின் சவாலான நிலப்பரப்புகளில் முக்கிய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், இணைப்பை மேம்படுத்துவதிலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலம் இத்திட்டம் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையை இது குறிக்கிறது.
2008-ல் தொடங்கப்பட்ட அருணாங்க் திட்டம், கரடுமுரடான மலைகள், அடர்ந்த காடுகள், கடினமான காலநிலைகளுக்கு மத்தியில் இன்றியமையாத எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்தத் திட்டம், நவீன தொழில்நுட்பங்கள், புதுமையான கட்டுமான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம், பொறியியல் சிறப்பம்சங்களையும் நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறது. மாற்று கட்டுமானப் பொருட்கள், ஜியோசெல்கள், சரிவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், இதர பொறியியல் தீர்வுகளைப் பயன்படுத்துவது முதலியவை, சவாலான நிலப்பரப்புகளில் உள்கட்டமைப்பின் நீடித்து நிலைக்கும் திறன், மீள்தன்மை, நீண்டகாலச் செயல்பாட்டுத் தரத்தை மேம்படுத்த உதவியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329191®=3&lang=1
****
TV/BR/SH