பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்புத் தேவைகளுடைய குழந்தைகளைத் தத்தெடுத்தலை குறித்த பயிலரங்கு ராஞ்சியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 4:56PM by PIB Chennai

மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம், ஜார்க்கண்ட் அரசு, ஜார்க்கண்ட் மாநில தத்தெடுப்பு வள முகமையுடன் இணைந்து, கிழக்கு மண்டலத்திற்கான தமது ஐந்தாவது பிராந்திய ஆலோசனைக் கருத்தரங்கை 2026 அக்டோபர் 27 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடத்தியது. குடும்ப அடிப்படையிலான பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான, நிரந்தரமான, அன்பான குடும்பங்களை அமைத்துக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த அமைப்பின் அர்ப்பணிப்பை இக்கருத்தரங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளின் மறுவாழ்வை மேம்படுத்துதல் என்ற தலைப்புடன், தத்தெடுப்பு விழிப்புணர்வு இயக்கம் 2025-ன் கீழ் அமைப்பு முன்னெடுக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்தது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், கள அளவில் உள்ள சவால்களுக்குத் தீர்வுகாணுதல், சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளின் தத்தெடுப்பு மற்றும் மறுவாழ்வை எளிதாக்குவதற்கான நடைமுறை உத்திகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் இக்கருத்தரங்கம் கவனம் செலுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328988&reg=3&lang=1

****

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329245) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी