சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 7:41PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 'எந்திரங்கள் வாயிலாக துப்புரவு சூழல் அமைப்பிற்கான தேசிய செயல் திட்டத்தின் (நமஸ்தே) கீழ், உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி. எல். வர்மா, பயனாளிகளுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களின் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்வதையும், அவர்களைச் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்துவதையும் நமஸ்தே திட்டம் நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
இதுவரை மொத்தம் 88,222 கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்களுக்குத் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 80,180 பணியாளர்கள் 'ஆயுஷ்மான்' அட்டைகள் மூலம் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இது தவிர, நாடு முழுவதும் 3,36,492 கழிவு சேகரிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329167®=3&lang=1
****
TV/BR/SH