மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

பயங்கரவாத செயல்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதில் இந்தியாவிற்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது: குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 5:39PM by PIB Chennai

பயங்கரவாத செயல்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதில் இந்தியாவிற்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு, குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய கூட்டமைப்பின் கூட்டாட்சி மன்றத்தின்  'ஸ்டேட் டூமா' தலைவரான திரு வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷ்ய நாடாளுமன்றக் குழுவினரை அவர் இன்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.

திரு வியாசெஸ்லாவ் வோலோடின், அவருடன் இந்தியா வந்துள்ள  ரஷ்யக் குழுவினரை அவர் வரவேற்றார். ரஷ்ய குழுவினருடனான சந்திப்பு  மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், 'ஸ்டேட் டூமா' தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக திரு வியாசெஸ்லாவ் வோலோடினுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

 

 

 

2026 செப்டம்பரில் நடைபெற்ற 'ஸ்டேட் டூமா'வின் ஒன்பதாவது கூட்டத்தொடருக்கான பிரதிநிதிகள் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கும், அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் அண்மைக்கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்த அவர், 2026 செப்டம்பரில் தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினுக்கு 'திருக்குறள்' நூலின் ரஷ்ய மொழிப் பதிப்பை பரிசாக வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இரு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பரிமாற்றங்களை திரு சி பி ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329062&reg=3&lang=1

(Release ID: 2329062)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329237) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी