புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 4:32PM by PIB Chennai
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அரசு அலுவலகங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கும், நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்குமான சிறப்பு இயக்கம் 6.0-ன் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.
புதுதில்லி லோதி சாலையில் உள்ள அடல் அக்சய ஊர்ஜா மாளிகையில் அமைந்துள்ள அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளை, இயக்குநர் திரு ஆதித்ய பிரதாப் சிங், துணைச் செயலாளர் திரு ரஜத் யாதவ் ஆகியோர் இன்று (2026 அக்டோபர் 26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, அலுவலக வளாகப் பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள், தூய்மையைப் பேணுவதோடு அலுவலக இடங்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். மேலும், கோப்புகள் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுவது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தொடர் கண்காணிப்பு, சிறந்த கோப்புகள் மேலாண்மை, அலுவலர்களின் தீவிரப் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் அலுவலகத் தூய்மையை மேம்படுத்த அமைச்சகம் தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328501®=3&lang=1
***
TV/PD/SH