நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0: நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைக் கடந்த ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 3:29PM by PIB Chennai

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலக்கரி இந்தியா (கோல் இந்தியா) நிறுவனத்தின் துணை அமைப்பான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைக் கடந்து தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2026 அக்டோபர் 2 முதல் 25 வரையிலான நிலவரப்படி, 30 இடங்கள் என்ற இலக்கைத் தாண்டி 32 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 106.7% சாதனை எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,98,505 சதுர அடி பரப்பளவிலான அலுவலக வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

பழைய தேவையற்ற 466 மெட்ரிக் டன் கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் அரசுக்கு ரூ.2.30 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிர்வாக நடைமுறைகளை விரைவுபடுத்தும் நோக்கில் 1,071 ஆவணக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையற்ற 820 கோப்புகள் முறையாக அகற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் ஆவண மேலாண்மையின் கீழ் 3,247 மின்னணுக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 2,436 மின்னணுக் கோப்புகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328950&reg=3&lang=1  

***

SS/PD/SH   


(வெளியீட்டு அடையாள எண்: 2329153) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी