தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெற்றிகரமான சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் கர்நாடகாவின் இஎஸ்ஐசி மருத்துவமனையில் 37 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 8:06PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் அமைப்பின் விரைவான தலையீட்டால், கர்நாடகாவில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக  மாதிரி மருத்துவமனையில் நிலவி வந்த தொழில் தகராறு சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.

 

இதன்மூலம், பணிநீக்கம் செய்யப்பட்ட 37 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவை ஊதியமான சுமார் ரூ.7.40 லட்சமும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

 

ஒப்பந்தக் காலம் முடிவதற்கு முன்பாகவே செவிலியர் உதவியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக மாநில இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு உதவித் தொழிலாளர் ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம், பாதிக்கப்பட்ட 37 ஒப்பந்தத் தொழிலாளர்களும் அக்டோபர் 23, 2026 முதல் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328707&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2328707

***

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329148) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada