குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தின் ஒரு பகுதியாக, பாரம்பரிய கைவினைத்திறன் கண்காட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 4:28PM by PIB Chennai

மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இரண்டு நாள் கலாச்சாரக் கண்காட்சி நடைபெற்றது.

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தின் ஒரு பகுதியாக, புதுதில்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் 2026 அக்டோபர் 26-27 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சியில், இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த கைவினைஞர்களும், கலைஞர்களும் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய,  சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு, இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள், பழங்குடித் திறன்களைக் காட்சிப்படுத்த இந்தக் கலாச்சாரக் கண்காட்சி ஒரு தளமாக இருந்தது.

இந்தியாவின் பாரம்பரிய கைவினைத்திறனின் பன்முகத்தன்மையையும், நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் கைவினைஞர் சமூகங்களின் பங்களிப்பையும் இது எடுத்துக் காட்டும் வகையில் நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரிக்ஸ் பிரதிநிதிகள் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், பீகார், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், நாகாலாந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு கைவினைஞர்கள் இந்தியாவின் கைவினைத்திறனை வெளிப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328975&reg=3&lang=1    

 

***

(Release ID: 2328975)

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329141) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Kannada