நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 7:12PM by PIB Chennai
சர்வதேச சட்ட அளவியல் குழுவின் 61-வது கூட்டத்தை, 2026 அக்டோபர் 26 முதல் 28 வரை புதுதில்லியில் இந்தியா நடத்துகிறது. சர்வதேச சட்ட அளவியல் அமைப்பின் இந்த உயரிய சர்வதேசக் கூட்டத்தை இந்தியா முதன்முறையாக நடத்துகிறது. அளவீட்டுத் தரநிலைகள், நுகர்வோர் பாதுகாப்பு, நேர்மையான வணிகம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் திருமதி நிதி காரே, நேர்மையான வர்த்தகம், நுகர்வோர் நம்பிக்கை, தொழில்சார் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, துல்லியமான, சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட அளவீடுகள் மிக அவசியம் என்று வலியுறுத்தினார். சர்வதேச ஒத்துழைப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை முன்வைத்த அவர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், வெளிப்படையான, திறமையான, எதிர்காலத்திற்குத் தயாரான சட்ட அளவியல் சூழலியலை உருவாக்குவதன் முக்கியத்தையும் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் துல்லியமான, நம்பகமான நேராக கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘ஒரே நாடு, ஒரே நேரம்’ என்ற தேசிய நேரப் பரவல் திட்டம் குறித்தும் செயலாளர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328661®=3&lang=1
***
TV/BR/SH