இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 6:35PM by PIB Chennai
உலக மக்கள்தொகையில் 49.5%-வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிக்ஸ் அமைப்பு, ஒரு பயனுள்ள பன்முகத் தளமாக உருவெடுத்துள்ளது என்று மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் கூறியுள்ளார்.
புதுதில்லியில், நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய, சிறப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இந்தியா பரிணாம வளர்ச்சியடைந்ததற்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மண்டபம் வாழும் சாட்சியாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கலாச்சாரங்கள், மொழிகள், நிலப்பரப்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றின் வளமானப் பன்முகத்தன்மையுடன், இந்தியாவை அறிவு, ஞானம் மற்றும் நாகரீக பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத களஞ்சியமாகத் திகழச் செய்துள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் இந்தியத் தலைமைத்துவத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியா, "மக்களை மையமாகக் கொண்ட மனிதநேய அடிப்படையிலான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தென் பகுதியில் உள்ள வளரும் நாடுகளின் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் வலுப்படுத்தும் வகையில், நாடுகளிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி வந்துள்ளதை திரு ஹரிவன்ஷ் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328640®=3&lang=1
***
(Release ID: 2328640)
TV/SV/SH