சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய அரசின் நிதி உதவியால் முனைவர் பட்டம் பெற்று அரசு ஆசிரியரான இளைஞர்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 3:15PM by PIB Chennai
பட்டியலின சமூகத்தைச் (மடிகா) சேர்ந்த 36 வயதுடைய அரசுப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடைய அனுபவம் மத்திய அரசின் நிதி உதவியுடன் கல்வியின் மூலம் முன்னேறி சமூகத்திற்கு உரிய பங்களிப்பை அளிக்க விரும்பும் ஆர்வமுடையவர்களுக்குச் சிறப்பான உதாரணமாக திகழ்கிறது.
நடுத்தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் உயர்கல்வியைத் தொடர்ந்து ஒரு பணியில் சேர்வதற்கு உறுதியுடன் இருந்தார். பேராசிரியராக வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்த அவர் நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் தனது படிப்பில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். உயர்கல்விக்கான செலவுகளை எதிர்கொள்வதற்கு அவர் சிரமப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த உதவி அவர் தனது உயர்கல்வியைத் தொடரவும், ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவும் உதவியது. இதனால் அவர் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இந்த உதவி அவருடைய கல்வி சார்ந்த நோக்கங்களை உண்மையான சாதனைகளாக மாற்ற உதவியது. தற்போது அவர் அரசு ஆசிரியராக பணிபுரிகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328946®=3&lang=1
***
SS/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2329112)
வருகையாளர் எண்ணிக்கை : 6