பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 12:04PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் அதன் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதிலும், தூய்மை நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. 2026 அக்டோபர் 25 வரையிலான நிலவரப்படி, பல முக்கிய இலக்குகளில் 100% சாதனையை எட்டியுள்ளது.
ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்ட 5,593 ஆவணக் கோப்புகள், 712 மின்னணுக் கோப்புகள் முழுமையாக மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் குறைதீர்ப்பு தொடர்பான 500 மேல்முறையீட்டு மனுக்களுக்கு 100% தீர்வு காணப்பட்டுள்ளது. பழைய தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.34.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பொதுமக்கள் சேவை வழங்கல் பிரிவில் பெறப்பட்ட 6,006 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், தூய்மையைப் பராமரித்து அலுவலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தவும் அமைச்சகம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328835®=3&lang=1
***
SS/PD/SH