ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சமூகம் சார்ந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை, வாழ்க்கைத் தரம், செரிமான சக்தி, எலும்புத் தாது அடர்த்தி போன்றவை மேம்பட உதவுகிறது: அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 2:43PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின் உடல், மன நலனை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட சமூகம் சார்ந்த ஆயுர்வேத சிகிச்சைத் திட்டத்திலிருந்து உத்வேகம் அளிக்கும் கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளதாக புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தைத் தொடர்ந்து வாழ்க்கைத் தரம், செரிமான சக்தி மற்றும் எலும்புத் தாது அடர்த்தியில் முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செரோடோனின், அசிடைல்கோலின், டிஎச்இஏ, வைட்டமின் டி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உயிர்க் குறியீடுகளில் முன்னேற்றம் எற்பட்டதுடன், அறிவாற்றல், சுகாதார மதிப்பீடுகளிலும், நேர்மறையான மாற்றங்கள் காணப்பட்டன.

2026 அக்டோபர் 24 அன்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவன வளாகத்தில்  நடைபெற்ற ஒரு பயிலரங்கில் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், இது தொடர்பான திட்ட அறிக்கை, நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328924&reg=3&lang=1   

***

(Release ID: 2328924)

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329104) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी