தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமரச முயற்சிகள் மூலம் பீகார் கிராமிய வங்கி ஊழியர்களுக்கு சுமார் ரூ.77.69 கோடி அளவிற்கு நிதி பலன்கள் கிடைக்கும்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 12:24PM by PIB Chennai

பீகார் கிராமிய வங்கி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர் அமைப்புகளுக்குமிடையே நிலவிய இரண்டு தொழில் பிரச்சனைகளுக்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மைத் தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகத்தின் பாட்னா பிரிவு உதவி தொழிலாளர் ஆணையரின் (மத்திய) சமரச முயற்சிகளின் மூலம் 2026 அக்டோபர் 22,23 ஆகிய தேதிகளில் சுமூகமாகத் தீர்வு காணப்பட்டது.

இந்த ஒப்பந்தங்களின் காரணமாக, பீகார் கிராமிய வங்கியின் 10,900 மேற்பட்ட ஊழியர்களுக்கு சுமார் ரூ.77.69 கோடி அளவிற்கு நிதி பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் பீகார் கிராமிய வங்கி ஊழியர்கள் அமைப்புடனான ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் ரூ.9.02 கோடி பலன்களும் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328843&reg=3&lang=1

***

SS/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2328930) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी