பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஐபிஏ-ன் நிர்வாகக் குழு கூட்டம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே. சொக்கலிங்கத்திற்கு ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ விருது அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 5:31PM by PIB Chennai

இந்திய பொது நிர்வாகக் கழகத்தின் (ஐஐபிஏ)  328-வது செயற்குழு கூட்டம், மத்திய  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் புதுதில்லியில் இன்று  நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஐஐபிஏ-ன் பயிற்சி, திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் எல்லையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள், அறிவியல்-தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு, நிர்வாகம் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த அம்சங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

கூட்டத்தின்போது, வருடாந்திர விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இதில், கல்விச் சிறப்பிற்கான 'டாக்டர் ராஜேந்திர பிரசாத்' விருது, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே. சொக்கலிங்கத்திற்கு வழங்கப்படவுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328589&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328745) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी