தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் தொலைத்தொடர்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழ் முகாம்களுக்கான அட்டவணை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 12:20PM by PIB Chennai

மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் முதன்மைத் தகவல் தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகம், தில்லி என்சிஆர் பகுதியில் தொலைத்தொடர்புத்துறை ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, உயிர்வாழ் சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை அடுத்த மாதம் நடத்துகிறது. இம்முகாம்கள் புதுதில்லி பிரசாத் நகரில் உள்ள முதன்மை தகவல் தொடர்பு கணக்கு அலுவலகம், ஜன்பத்தில் உள்ள கிழக்கு நீதிமன்ற விரிவாக்க மையம், தில்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத் உள்ளிட்ட பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் வளாகங்களில் நடைபெறுகின்றன.

நவம்பர் 3 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும். இதில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பித்தல், முக அங்கீகாரச் செயலியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், குறைதீர்ப்புச் சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஓய்வூதியதாரர்கள் உரிய ஆவணங்கள், தங்களது புகைப்படத்துடன் நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சரிபார்ப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தங்களது வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்கள் இம்முகாம்களில் பங்கேற்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328345&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328734) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी