புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுத் துறைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த மாதாந்திர அறிக்கை வெளியீடு: ரூ.37.56 லட்சம் கோடி மதிப்பில் 1,853 திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், தனது பைமானா இணையதளம் வாயிலாக மத்திய அரசுத் துறைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான கண்காணிப்புப் பணிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 2026 செப்டம்பர் நிலவரப்படி, 17 அமைச்சகங்கள், துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ.37.56 லட்சம் கோடி மதிப்பிலான 1,853 உள்கட்டமைப்புத் திட்டங்கள் இதன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக இதுவரை ரூ.17.73 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த திட்டச் செலவில் சுமார் 47.21% ஆகும்.

இந்தத் திட்டங்களில், ரூ.1,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான 780 பெருந்திட்டங்களும், ரூ.1,000 கோடிக்கு உட்பட்ட 1,073 பெரிய திட்டங்களும் அடங்கும். இவற்றில் 654 திட்டங்களில் 80%-க்கும் அதிகமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பொருளாதார விவகாரங்கள் துறையின் வகைப்பாட்டின்படி, போக்குவரத்து, தளவாடங்கள் துறை ரூ.20.07 லட்சம் கோடி மதிப்பீட்டிலான 1,320 திட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளது. எரிசக்தித் துறை ரூ.11.04 லட்சம் கோடி மதிப்பீட்டிலான 225 திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இவ்விரு துறைகளும் சேர்ந்து மொத்த திட்டங்களில் 83.4 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 974 திட்டங்களுடன் முதலிடத்திலும், ரயில்வே அமைச்சகம் 284 திட்டங்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. 2026 செப்டம்பர் மாதத்தில் பீகாரில் 1320 மெகாவாட் பக்சர் அனல் மின் திட்டம், தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலை திட்டத்தின் ஒரு பகுதி உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் இதே மாதத்தில் 83 புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களும் பைமானா கண்காணிப்பு அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328472&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328732) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी