நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை, நிர்வாகத் திறனை நிறுவனமயமாக்கும் வகையில், சிபிஐசி 'சிறப்பு இயக்கம் 6.0' -ஐ முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 5:17PM by PIB Chennai

அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2026 வரை நடைபெறும் இந்த நாடு தழுவிய முன்முயற்சி, தூய்மையைப் பராமரித்தல், நிலுவையில் உள்ள நிர்வாகப் பணிகளைக் கணிசமாகக் குறைத்தல், அலுவலக இடங்களைச் சிறப்பாக நிர்வகித்தல், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மின்னணு கழிவு மேலாண்மை விதிகளுக்கு ஏற்ப மின்னணு கழிவுகளை முறையாக அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இயக்கம் நிறைவடையும் நிலையில், மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரியத்தின் (சிபிஐசி) கீழ் செயல்படும் பல்வேறு மண்டலங்கள்,  கள அலுவலகங்கள், 449 இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோப்பு மேலாண்மை மற்றும் ஆய்வு: மொத்தம் 22,784 கோப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, நடைமுறைகளின்படி 17,997 கோப்புகள் அகற்றப்பட்டன. மேலும், 622 மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 204 கோப்புகள் முறையாக முடித்து வைக்கப்பட்டன.

பழைய பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகளை அகற்றுதல்: மொத்தம் 21,015 கிலோ எடையுள்ள தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன. இதில் 3,174 கிலோ மின்னணு கழிவுகள், 16,817 கிலோ பொதுக் கழிவுகள் மற்றும் 1,024 கிலோ அலுவலகம் சாராத கழிவுகள் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328576&reg=3&lang=1

(Release ID: 2328576)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328730) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese