இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 4:35PM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலக வளாகங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கும், மின்னணுக் கழிவுகளை அகற்றுவதற்குமான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இயக்கத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 1,565 இடங்கள் என்ற இலக்கைத் தாண்டி, 1,696 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 130.16 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய தேவையற்ற 16,158 மெட்ரிக் டன் கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் அரசுக்கு ரூ.53.94 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
நிர்வாக நடைமுறைகளை விரைவுபடுத்தும் நோக்கில் 78,635 ஆவணக் கோப்புகள், மின்னணுக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையற்ற 70,093 கோப்புகள் முறையாக அகற்றப்பட்டுள்ளன. பணியிடங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஏற்படுத்துவதுடன், பழங்குடியின மாணவிகளுக்குக் கல்வி உதவி வழங்குதல், மறுசுழற்சி விழிப்புணர்வுப் பயிலரங்குகள் நடத்துதல் போன்ற சமூக நல நடவடிக்கைகளிலும் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328508®=3&lang=1
****
TV/PD/SH