கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் தூய்மைப் பணியை மேற்கொள்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 5:07PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம், அதனுடைய நிறுவனங்கள் சிறப்பு இயக்கம் 6-ஐ தீவிரமாக அமல்படுத்துகின்றன. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக 173 தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 33 ஆயிரத்து 199 நேரடி மற்றும் மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் 9,808 கோப்புகள் நீக்கப்பட்டன. கழிவுப்பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.9.79 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அத்துடன் 88 ஆயிரத்து 171 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இது இட மேலாண்மையை மேம்படுத்தியதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த பணிச்சூழலையும் உருவாக்கி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328543®=3&lang=1
****
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2328695)
வருகையாளர் எண்ணிக்கை : 10