சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை சார்பில் ஊழலற்ற நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 3:15PM by PIB Chennai

மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை சார்பில், விழிப்புணர்வு வார விழா 2026 அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை ஒன்றிய செயலாளர் சுதன்ஷ் பாண்ட் தலைமையில், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஊழல் இல்லாத நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், வெளிப்படைதன்மை, நேர்மை, நம்பகத்தன்மையை பின்பற்றுவது, அறநெறியுடன் மக்கள் சேவையாற்றுவது குறித்து உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து பேசிய மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை செயலாளர் சுதான்ஸ் பண்ட், ஊழலை ஒழிக்க அனைத்து ஊழியர்களும் பணியில் வெளிப்படை தன்மையுடன் இருப்பது அவசியம் என அறிவுறுத்தினார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328437&reg=3&lang=1

****

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328685) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी