தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயலி அடிப்படையிலான நேரலைத் தொலைக்காட்சி சேவைகள் விநியோகத்திற்கான அங்கீகாரக் கட்டமைப்பு: டிராய் பரிந்துரைகள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 4:13PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), 'செயலி அடிப்படையிலான நேரலைத் தொலைக்காட்சி சேவைகள் விநியோகத்திற்கான அங்கீகாரக்வும் கட்டமைப்பு' தொடர்பான விரிவான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இணையதளம், நவீன தொழில்நுட்பச் சாதனங்கள் வழியாக நேரலைத் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் இச்சேவைகளுக்கான கொள்கை வழிமுறைகளை வகுக்கும் வகையில் இப்பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் பிரிவு 3(1)(a)-ன் கீழ், தொலைக்காட்சி அலைவரிசை விநியோக சேவைகளின் ஒரு தனி உட்பிரிவாக இச்சேவைகளைச் சேர்க்க டிராய் பரிந்துரைத்துள்ளது. புத்தாக்கம், எளிமையான தொழில் சூழல், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எளிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தேசிய அளவிலான செயல்பாட்டுடன், தொடக்கத்தில் 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலும், பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையிலும் இந்த அங்கீகார முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கென ரூ.10,000 விண்ணப்பச் செயலாக்கக் கட்டணம், ரூ.1 லட்சம் ஒருமுறை நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், எவ்வித வங்கி உத்தரவாதம் அல்லது கூடுதல் பாதுகாப்பு வைப்புத்தொகையும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்கள், ஓஎஸ் நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே தங்களது சாதனங்களில் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328480&reg=3&lang=1

***

TV/PD/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2328657) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी