சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 6-ன் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 4:10PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் தூய்மையை வழக்கமாக்குவதையும் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட சிறப்பு இயக்கம் 6-ன் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆய்வு செய்தது. அத்துடன் 2026 அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ள சுகாதாரம், தூய்மை குறித்த புத்துணர்ச்சி நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டத்தின் போது மதிப்பீடு செய்யப்பட்டது.

புதுதில்லியில் உள்ள கர்த்தவ்யா பவன் 1-ல் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி புன்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328483&reg=3&lang=1

***

TV/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2328650) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी