புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு 2027-28 நிதியாண்டுடன் (ஏப்ரல்-மார்ச்) ஒருங்கிணைத்து நடத்தப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க 2021-22 முதல் வருடாந்திரக் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இக்கணக்கெடுப்பின் கால அளவை நடப்பு நாட்காட்டி ஆண்டிலிருந்து மாற்றி, 2027 ஏப்ரல் முதல் 2028 மார்ச் வரையிலான நிதியாண்டுடன் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய கணக்குகள் தயாரிப்பிற்கும், பிற தொழில் துறை கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடுவதற்கும் இந்நடவடிக்கை வழிவகை செய்யும்.

வளர்ந்து வரும் தரவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இக்கணக்கெடுப்பில் புதிய கொள்கை சார்ந்த கேள்விகள் சேர்க்கப்பட உள்ளன. குறிப்பாக, பெண் தொழில்முனைவோர் தங்களது நிறுவனங்களை நடத்துவதிலும், நிர்வகிப்பதிலும் எதிர்கொள்ளும் பாலின ரீதியான சவால்கள் முதல் முறையாக இதில் பதிவு செய்யப்படவுள்ளன. மேலும், நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு மின் ஆதாரங்கள், நீண்ட கால சொத்து முதலீடுகள், ஜவுளி அமைச்சகத்தின் பரிந்துரைப்படி கைத்தறி, விசைத்தறி, கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கான கேள்விகளும் இடம்பெறவுள்ளன.

இப்புதிய கணக்கெடுப்புக்கான அட்டவணை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை nssocpd.coord@mospi.gov.in, tc.dpd@mospi.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328476&reg=3&lang=1

***

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328630) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी