உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிஃப்டெம் நிறுவனம் சார்பாக, ‘ஹேக் தி ஃபோர்க்’, இந்தியாவின் முதல் ஏஐ உணவுத் தொழில்நுட்ப ஹேக்கத்தான்

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2026 7:41PM by PIB Chennai

மாற்றுப் புரதத் துறையில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் ஏஐ× உணவு தொழில்நுட்ப ஹேக்கத்தானான 'ஹேக் தி ஃபோர்க்'-ஐ, குண்ட்லியில் உள்ள  தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம்  (நிஃப்டெம்) நடத்தியது.'ஹேக் தி ஃபோர்க்'-கின் இயக்குநர் திருமதி ஆலிஸ் பிஜி அக்டோபர் 24 அன்று இதைத் தொடங்கி வைத்தார்.

பிரான்ஸை தளமாகக் கொண்ட லாப நோக்கமற்ற அமைப்பான 'ஹேக் தி ஃபோர்க்', நிஃப்டெம் உடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நிலையான உணவு அமைப்புமுறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளைக் கண்டறியும் நோக்கில், இளம் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை ஒன்றிணைப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். விண்ணப்பித்திருந்த 85-க்கும் மேற்பட்ட குழுக்களில் இருந்து, 25 குழுக்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், 10 மாநிலங்களைச் சேர்ந்த 22 குழுக்களில் இடம்பெற்றிருந்த 90-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், அந்த நிறுவனத்தில் நடைபெற்ற புத்தாக்கச் சவாலில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328253&reg=48&lang=2

***

SK/BK/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2328373) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी