இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 3:45PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகம், அலுவலக வளாகங்களில் தூய்மையை பராமரிப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பதற்கும் சிறப்பு இயக்கம் 6.0-ஐ தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்திய சுற்றுலா அலுவலகங்கள், உணவக மேலாண்மை நிறுவனங்கள், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வியக்கத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 5,654 பணிகளில், இதுவரை 3,563 பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. 212 இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 3,006 ஆவணக் கோப்புகள், 2,366 மின்னணுக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பழைய தேவையற்ற கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் அலுவலகங்களில் 62,691 சதுர அடி பரப்பளவிலான இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், கழிவுப் பொருட்கள் ஏலத்தின் வாயிலாக ரூ.64.58 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் இத்தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326609®=3&lang=1
***
SK/PD/RJ