சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: குடியரசு துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 5:08PM by PIB Chennai

மத்திய சட்ட ஆணையம் சார்பில் 'கூட்டுறவுக் கூட்டாட்சி, சட்ட சீர்திருத்தங்கள்: தேசிய, மாநிலக் கண்ணோட்டங்கள்' என்ற தலைப்பிலான தேசிய மாநாடு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இம்மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டார். நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து தேசிய இலக்குகளை நோக்கிச் செயல்படுவதே இந்தியக் கூட்டாட்சியின் உண்மையான வலிமை என்றும், காலாவதியான சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நிறுவனங்களுக்கிடையேயான தொடர் உரையாடல், ஆதாரங்களின் அடிப்படையிலான சட்ட சீர்திருத்தம், மனித மேற்பார்வையுடன் கூடிய தொழில்நுட்பம், கமக்களை மையமாகக் கொண்ட சட்டக் கட்டமைப்பு ஆகிய நான்கு முக்கிய முன்னுரிமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

சட்ட ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி பேசுகையில், ஒரு சட்டம் குடிமக்களின் நேரம், செலவு, நடைமுறைச் சுமையைக் குறைக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். தேசிய, மாநில அளவிலான சட்ட அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326670&reg=3&lang=1

***

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328244) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी