பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற திலீப்பிற்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 9:48PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற திலீப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேம்பட்ட செயல்திறனுடன் தமது பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இது என்றும், அவரது வேகம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை என்றும், இந்தியா அவரை நினைத்துப் பெருமை கொள்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 400 மீட்டர் டி47 பிரிவில் தங்கம் வென்ற திலீப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். தனது பட்டத்தை மேம்பட்ட செயல்திறனுடன் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவரது வேகம், உறுதி, அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. இந்தியா அவரை நினைத்துப் பெருமை கொள்கிறது"

***

(Release ID: 2326994)

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328240) வருகையாளர் எண்ணிக்கை : 10