இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 6:53PM by PIB Chennai
தேசிய தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரநிலை மேலாண்மை ஆணையத்தின் தலைவர் திரு ராஜேஷ் வர்மா தலைமையிலான உயர்நிலைக் குழு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், தர்ன் தரன் மாவட்டங்களின் துணை ஆணையர்கள், பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெல் அறுவடைக்குப் பிந்தைய கழிவுகளை (நெல் தாள்களை) முழுமையாக நிர்வகிக்க ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நெல் தாள்களை எரிக்கும் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது, முற்றிலுமாக ஒழிப்பது குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்பட்டது .
நெல் தாள்களை அந்தந்த இடத்திலேயே அல்லது வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் இந்தக் குழு பரிசீலனை செய்தது. தீ வைப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மறுஆய்வு செய்யப்பட்டது. தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்த இந்தக் குழு, இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328041®=3
****
SK/SV/RJ