ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், ஜவுளி ஆணையர் அலுவலகத்தின் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 5:46PM by PIB Chennai

நிறுவனங்கள், கீழ்நிலை அலுவலகங்கள் முழுவதும் தூய்மைப் பராமரிப்புப் பணிகளை ஊக்குவித்தல், நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், தேவையற்ற பொருட்கள் மற்றும் மின்னணுக் கழிவுகளைத் திறம்பட அகற்றுவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ மத்திய ஜவுளி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நாடு தழுவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சிறப்பு இயக்கம் 6.0-ஐ வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு, ஜவுளி ஆணையர் அலுவலகம் தனது அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

மேலும், தூய்மை, திறமையான ஆளுகை மற்றும் நிலையான அலுவலக மேலாண்மை ஆகிய நோக்கங்களுக்கான தனது உறுதியான நிலைப்பாட்டையும் ஜவுளி ஆணையர் அலுவலகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கழிவுகளைப் பிரித்து, பொறுப்புடன் மீட்டெடுத்து/அகற்றுவதை ஊக்குவிப்பதற்காக, மறுசுழற்சிக்கான துணிக் கழிவுகள், மின்னணுக் கழிவுகளுக்கென பிரத்யேக சேகரிப்புத் தொட்டிகள் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டன. உட்புறத் தாவரங்களைப் பராமரித்து, நீர் பாய்ச்சுவதன் மூலம், பசுமை முன்னெடுப்பு நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327480&reg=3&lang=1&_gl=1    

***

SK/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328037) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी