இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 4:53PM by PIB Chennai
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் திரிசூல், அக்டோபர் 21, 2026 அன்று போர்ச்சுகல், லிஸ்பன் துறைமுகத்தில், தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த பயணத்தின் போது, போர்ச்சுகல் கடற்படையுடன், தொழில்முறை சார்ந்த கலந்துரையாடல்கள், அறிவுப் பகிர்வு, சிறந்த நடைமுறைகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. இது இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் பொதுவான கடல்சார் நலன்கள் குறித்த சிறப்பான புரிதலுக்கு பங்களித்ததுடன், செயல்பாட்டு ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படை அதிகாரி, போர்ச்சுகல் கடற்படையின் தளபதியைச் சந்தித்து, செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேம்படுத்துவது குறித்தும், ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வது குறித்தும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையேயான தொடர் ஈடுபாட்டையும், கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் பொதுவான ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்தக் கப்பல், அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர், போர்ச்சுகல் கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு புனீத் ஆர் குண்டல் இந்த கப்பலுக்கு வருகை தந்து, அதிகாரிகள், குழுவினருடன் கலந்துரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327413®=3&lang=1
***
SK/SV/RJ