PIB Backgrounder
azadi ka amrit mahotsav

விபி- ஜி ராம் ஜி கிராமப்புற வேலைவாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் ஒரு புதிய கட்டமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 OCT 2026 11:56AM by PIB Chennai

கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு புதிய கட்டமைப்பு

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, விபி- ஜி ராம் ஜி எனப்படும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. விபி- ஜி ராம் ஜி சட்டம், 2025, ஜூலை 1, 2026 அன்று அமலுக்கு வந்ததுடன், இது நாட்டின் அனைத்து கிராமப்புறங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து,  விபி- ஜி ராம் ஜி திட்டமாக அது மாற்றம் அடைந்து எவ்வித இடையூறுமின்றியும் தடையின்றியும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதியத்துடன் வேலைவாய்ப்பிற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த உத்தரவாதமானது, வயதுவந்த, தன்னார்வமாக முன்வரும் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்தையும் உள்ளடக்கியது. இது ஒரு வளமான, மீள்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவுக்கு, அதிகாரமளித்தல், வளர்ச்சி, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இது நீர்ப் பாதுகாப்பு, முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு, தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிப்பதற்கான பணிகளைச் செய்தல் ஆகிய நான்கு கருப்பொருள் சார்ந்த பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.

இதில் கிராமப்புற வளர்ச்சித் திட்டமிடலின் மையமாக உள்ளூர் தேவைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை கிராம சபை, கிராமப் பஞ்சாயத்தின் தீவிரப் பங்கேற்புடன் தயாரிக்கப்படுகின்றன. திட்டங்களுக்கு உரிய பரிந்துரைகளையும் ஒப்புதலையும் கிராம சபை வழங்குகிறது.

பங்கேற்புத் திட்டமிடல்: கிராமப் பஞ்சாயத்துகள், கிராம சபையின் ஈடுபாட்டுடன், உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் பணிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

சொத்து செயல்திட்டம்: இந்த செயல்முறை, கிராம பஞ்சாயத்திற்குள் இருக்கும் சொத்துக்கள், உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் இடைவெளிகள் ஆகியவற்றின் விரிவான கணக்கெடுப்பை மேற்கொள்வதில் தொடங்குகிறது.

ஜிஐஎஸ் அடிப்படையிலான திட்டமிடல்: திட்டமிடல் செயல்முறையானது ஜிஐஎஸ், யுக்தாரா, பிஎம் விரைவு சக்தி, பிற டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துகிறது. புவிசார், புவிசாரா தகவல்கள், உள்ளூர் தேவைகள், தற்போதுள்ள வளங்களை அடிப்படையாகக் கொண்ட, சான்றுகள் அடிப்படையிலான தகவல்கள் போன்றவை ஒருங்கிணைந்த திட்டமிடலுக்குத் துணைபுரிகின்றன.

விபி ஜி-ராம் ஜி - களத்தில் முன்னேற்றம்:

2026 ஜூலை 1 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, 24 செப்டம்பர் 2026 நிலவரப்படி , விபி-ஜி ராம் ஜி திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

* தொழிலாளர்கள்: 2026-27-ல் 10.88 கோடி

உருவாக்கப்பட்ட சொத்துக்கள்: 2.83 லட்சம்

* உருவாக்கப்பட்ட வேலை நாட்கள்: 31.69 கோடிக்கும் மேல்

* பெண்களின் பங்களிப்பு: 2026-27-ல் 61.65 சதவீதம்

* தேவைக்கேற்ப தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு: சுமார் 2.23 கோடி கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த 2.81 கோடிக்கும் அதிகமானோர்.

* செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள்: 97.17 லட்சம்

* நாடு முழுவதும் தற்போது பணிகளைச் செயல்படுத்தி வரும் கிராமக ஊராட்சிகளின் எண்ணிக்கை: சுமார் 2.31 லட்சம்

ஊதிய விகிதம்: ஒரு நாளைக்கு ₹300 முதல் ₹450 வரை

வழங்கப்பட்ட கிராம்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளின் மொத்த எண்ணிக்கை: 15.17 கோடி

நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம்:

* 2026-27-ம் நிதியாண்டிற்கான இடைக்கால ஒதுக்கீடாக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ₹93,841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இதில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு முதல் தவணையாக ₹ 25,880 கோடி மதிப்பிலான முதன்மை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்டத்திலிருந்து கிராமப்புற வளர்ச்சி:

விபி-ஜி ராம் ஜி திட்டமானது வேலைவாய்ப்பு, பங்கேற்புத் திட்டமிடல், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. கிராமப் பங்கேற்புத் திட்டங்கள் மூலம், கிராம ஊராட்சிகள், உள்ளூர் தேவைகளைக் கண்டறிந்து, தற்போதுள்ள வளங்களைப் பட்டியலிட்டு, மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. தொழில்நுட்பம், ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் அமைப்புகள் ஆகியவை வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் வலுப்படுத்துகின்றன. இந்தக் கட்டமைப்பு, வேலைவாய்ப்பை நிலையான சொத்து உருவாக்கத்துடன் இணைத்து, மீள்திறன் கொண்ட வாழ்வாதாரங்களுக்கும் ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327845&reg=48&lang=1

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327865) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी